முதல் பதிவு
கிட்டத்தட்ட 4 வருடம் கண்மூடித்தனமான ட்ரேடிங், ஒழுங்கில்லாத இன்வெஸ்டிங் செய்தலாலும் குறைந்தபட்சம் 10% லாபம் கிடைத்தது விடும் டிமேட் அக்கௌன்ட் தான் என்னுடையது
20 முதல் 25 ஸ்டாக்ஸ், அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை, பெரும்பாலும் ஸ்மால் கேப் மற்றும் டிவிடெண்ட் தரும் பங்குகள் தான் அதிகம் இருக்கும்.. பச்சை வண்ணத்தை விட சிகப்பு நிறம் அதிகம் தென்படும் என்பது தனிச்சிறப்பு.
திரும்பத் திரும்ப செய்யும் தவறுகள் தான் மிக அதிகம். என்னதான் பிரைஸ் அலெர்ட், ஸ்டாப் லாஸ், சார்ட்ஸ் என முந்தய நாள் பிராக்டிஸ் செய்திருந்தாலும் 9:00 முதல் 3:30 வரை ஏனோ ஒரு படபடப்பு தொற்றி கொண்டு செய்யவேண்டியவற்றை மடைமாற்றி விடுகிறது என்பது தான் சோகமான உண்மை.
ஆபிசில் கொஞ்சம் அதிகமாகவே ப்ரீயாக இருப்பதால் இதையும் ரெண்டாவது வருமானம் தரும் ஒரு கருவியாக பார்க்க முடிகிறது.
இதைத் தவிர அமேசான் ஆபிலியேட் மார்க்கெட்டிங் செய்யலாம் என்ற எண்ணமும் உண்டு. இனி வரும் நாட்களில் எக்ஸ் தளத்தில் ப்ளூட்டிக் வாங்கி போஸ்ட் செய்வது எனது நாலாவது வருமான வாய்ப்பாக இருக்க கூடும் .
தொடரும்…..
Comments
Post a Comment